கமல்ஹாசன்
கமல்ஹாசன்

யார் அந்த பிக்பாஸ் அல்டிமேட் 4வது போட்டியாளர் ? : க்ளூ இதோ

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் குறித்த தகவலை டிஸ்னி பிளஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
Published on

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் நான்காவது போட்டியாளர் குறித்த தகவலை டிஸ்னி பிளஸ் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5  ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் காணலாம். இதன் மூலம் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம். வரும் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ளதாக சிநேகன், ஜூலி மற்றும் வனிதா ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், நான்காவது போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. யார் அந்த ஹவுஸ்மேட் என்ற தலைப்பில் வெளியிட்ட விடியோவில், கரண்டி, துண்டு, தீப்பெட்டி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

இதனடிப்படையில், நான்காவது ஹவுஸ்மேட் சுரேஷ் சக்ரவர்த்தி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com