
பிரபு தேவா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பொன் மாணிக்கவேல் மற்றும் தேள் திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. மேலும் இவரது நடிப்பில் யங் மங் சங் மற்றும் பகீரா படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன.
இதில் பகீரா திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், சாக்ஷி அகர்வால், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, யாஷிகா ஆனந்த், பிரகதி, மோகன் வைத்யா, பாபா பாஸ்கர், திப்ஷி பிளெஸ்ஸி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | 'விக்ராந்த் ரோனா' வெளியீட்டுத் தேதி ஒத்திவைப்பு
இந்த நிலையில் பிரபு தேவா ரேக்ளா படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் கிராமப்புறங்களில் நடக்கும் ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டி பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை அன்பு இயக்குகிறார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.