

லவ் டுடே தலைப்பை எங்களுக்காக நடிகர் விஜய் விட்டுக்கொடுத்ததாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
திருட்டுப்பயலே, சந்தோஷ் சுப்ரமணியம், மதராசப்பட்டினம், மாற்றான், அநேகன், தனி ஒருவன் பிகில் போன்ற பல படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது இந்த நிறுவனம் கோமாளி பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து இயக்கும் படத்தை தயாரித்துவருகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தல் வெளியானது.
அதன்படி இந்தப் படத்துக்கு லவ் டுடே எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் லவ் டுடே என்ற பெயரில் வெற்றிப் படம் இருப்பது குறிப்பிடத்தக்கது. அது ரசிகர்களிடையே மிக பிரபலமான படமும் கூட.
இந்த நிலையில் இதற்கு விளக்கமளிக்கும் விதமாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''சூப்பர் குட் ஃபிலிம்ஸ்க்கு மனமார்ந்த நன்றி. ஆர்பி சௌத்ரி சார் மற்றும் தளபதி விஜய் சார் எங்களுக்கு இந்த தலைப்பை கொடுத்துள்ளனர். இந்தத் தலைப்பு எங்கள் படத்துக்கு பலமாக அமைந்துள்ளது. இதை விட சிறப்பான தலைப்பை நாங்கள் கேட்க முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.