'சுப்ரமணியபுரம்' படத்துக்கு 14 வயது - சசிகுமார் சொன்ன செம அப்டேட் - ''விரைவில் தகவல் வரும்''

சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து நடிகர் சசிகுமார் அடுத்ததாக அவர் இயக்கவிருக்கும் படம் குறித்து அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 
'சுப்ரமணியபுரம்' படத்துக்கு 14 வயது - சசிகுமார் சொன்ன செம அப்டேட் - ''விரைவில் தகவல் வரும்''
Published on
Updated on
1 min read

சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதையடுத்து நடிகர் சசிகுமார் புதிதாக அவர் இயக்கவிருக்கும் படம் குறித்து அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தயாரித்து, எழுதி, இயக்கி, கதாநாயகர்களில் ஒருவராக நடித்த படம் சுப்ரமணியபுரம். சசிகுமாரின் முதல் படமான இந்தப் படம் கடந்த 2008 ஆம் ஆண்டு  ஜூலை 4 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அந்த வகையில் இந்தப் படம் வெளியாகி 14 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 

80களில் நடைபெறும் கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் பல படங்களுக்கு முன்னுதாரணமாக இருந்துவருகிறது. நீளமான சட்டை காலர், அகலமான கால் பகுதி கொண்ட பெல்ஸ் வகை பேண்ட், பழைய பேருந்து, வீடு என 80களின் மதுரையை தத்ரூபமாக கண்முன் கண்டுவந்து நிறுத்தினார் சசிகுமார்.

அந்த தலைமுறை இளைஞர்கள், அரசியல் மற்றும் அதிகார பலத்தால் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப்பட்டனர் என்பதை மிக யதார்த்தமாக இந்தப் படம் பேசியது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையும், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் பக்கபலமாக அமைந்தது. குறிப்பாக படம் வெளியானபோது பலருக்கும் இந்தப் படத்தை அறிமுகப்படுத்தியது கண்கள் இரண்டால் பாடல்தான் என்றால் மிகையில்லை. 

மேலும் ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்துக்கு சுப்ரமணியபுரம் தான் முன்மாதிரியாக இருந்தது என்று தெரிவித்திருந்தார். அந்தப் படத்தில் இயக்குநர் சசிகுமாருக்கு நன்றியும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதும் சினிமா கற்கும் மாணவர்களுக்கு சுப்ரமணியபுரம் பல்வேறு விஷயங்களுக்கு உதாரணமாக சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் குறித்து சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை 4 எனக்கு எப்பொழுதும் சிறப்பான நாள். சுப்ரமணியபுரம் இந்த நாளில்தான் வெளியானது. இன்றுவரை மக்கள் இந்தப் படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பது எனக்கு பெருமை. விரைவில் இயக்குநராக எனது அடுத்தப்படம் குறித்து உங்களுக்கு தகவல் வரும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com