
ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக சைதன்யாவுடனான விவாகரத்து, தி ஃபேமிலி மேன் தொடர், புஷ்பா ஊ சொல்றியா பாடல் என இந்திய அளவில் பிரபலமாகியிருக்கிறார் சமந்தா. அவரைப் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
மேலும் கவர்ச்சிப் படங்களை அடிக்கடி பகிர்ந்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். தெலுங்கில் தனி கதாநாயகியாக நடித்துவரும் சமந்தா ஆங்கிலம் படமொன்றிலும் நடிக்கவிருக்கிறார்.
இதையும் படிக்க | ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்?
ஹிந்தியில் குவியும் வாய்ப்பு
இதுமட்டுமல்லாமல் ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றனவாம். இதன் ஒரு பகுதியாக ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக சமந்தா ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது சமந்தா நடிக்கும் முதல் ஹிந்திப் படமாக இருக்கும். இந்தப் படத்தை தினேஷ் விஜன் என்பவர் இயக்குகிறார்.
மேலும் நடிகை டாப்ஸி நடிக்கும் படத்திலும் சமந்தா நடிக்கவிருக்கிறார். இதனை டாப்ஸி ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.