'இரவின் நிழல் சர்ச்சை' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட பார்த்திபன்

இரவின் நிழல் பட நிகழ்வில் நாயகி பிரிகிடா தவறாக பேசியதாக சர்ச்சை உருவான நிலையில் இயக்குநர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளார். 
'இரவின் நிழல் சர்ச்சை' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட பார்த்திபன்
Published on
Updated on
1 min read

இரவின் நிழல் பட நிகழ்வில் நாயகி பிரிகிடா தவறாக பேசியதாக சர்ச்சை உருவான நிலையில் இயக்குநர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளார். 

பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. 

எது உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் ?

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த சில நாட்களாக பல சர்ச்சைகளை சந்தித்தது. 

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், கடந்த  2013 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

இதனையடுத்து பார்த்திபன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் இடையே கருத்து மோதல் வலுத்தது. இந்த நிலையில் புதிய சர்ச்சையாக அந்தப் படத்தில் நாயகியாக நடித்த பிரிகிடா, சேரிக்கு சென்றால் அங்கு கெட்ட வார்த்தை மட்டும் தான் கேட்க முடியும் என பேசியது சர்ச்சையானது. 

மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்

பிரிகிடாவின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக பிரிகிடா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது மொழி மாறுகிறது என்பதை தெரிவிக்க முயற்சித்தேன். ஆனால் தவறான உதாரணத்தைக் கூறியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989 ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போரட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com