''பணத் தேவை இருந்தது, பணத்துக்காகதான் இப்படி பண்ணேன்'' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட நடிகர்
பணத் தேவைக்காக ரம்மி விளம்பரத்தில் நடித்ததாக நடிகர் லால் கூறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் எங்கள் அண்ணா, சண்டக்கோழி, தீபாவளி, காளை, தோரணை, சீமராஜா, சுல்தான், கர்ணன், டாணாக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் லால்.
இயக்குநர் சித்திக்குடன் இணைந்து சித்திக் - லால் என்ற பெயரில் சில படங்களை இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இவர் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்திருந்தார். இதற்கு ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் லால் விளக்கமளித்துள்ளார். அவர் பேசியதாவது, ''அரசின் அனுமதியுடன்தான் என்னை அனுகினார்கள். கரோனா காலத்தில் எனக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அதன் காரணமாகவே இந்த விளம்பரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்த விளம்பரம் காரணமாக யாராவது துன்பம் அடைந்திருந்தால் அவர்களுக்காக நான் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாடு மாநிலங்களில் இளைஞர்கள் பணத்தை இழந்து தற்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும்'' என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.