
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள பகீரா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள படம் பகீரா. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | இவர்கள் எல்லாம் பிக்பாஸ் 6 போட்டியாளர்களா ?
இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்காக பிரபு தேவா மொட்டையடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.