சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை கையிலெடுக்கும் 'ஜெய்பீம்' இயக்குநர் - அடுத்த அதிரடி

சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் திரைப்படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை கையிலெடுக்கும் 'ஜெய்பீம்' இயக்குநர் - அடுத்த அதிரடி

சரவண பவன் ராஜகோபால் - ஜீவ ஜோதி வழக்கை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் திரைப்படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெய் பீம் என்ற பெயரில் ஞானவேல் திரைப்படமாக இயக்கியிருந்தார். இந்தப் படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரித்து நடித்திருந்தார். 

நேரடியாக ஓடிடியில் வெளியான இந்தப் படம் பெரும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை இந்திய அளவில் பல்வேறு பிரபலங்கள் பாராட்டி கருத்து தெரிவித்தனர். 

இதனையடுத்து ஜெய்பீம் இயக்குநர் ஞானவேலின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. மீண்டும் சூர்யாவுடன் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு தனது புதிய படத்தை ஞானவேல் இயக்கவிருக்கிறார். 

சரவண பவன் என்ற பெயரில் உணவு விடுதி நடத்தி வந்த ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்துவிட்டதாக உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டது. 

ஹிந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில் நடிகர்கள் மற்றும் தொழில்நுடப் கலைஞர்களின் விவரங்கள் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com