
டி-ஷர்ட்டில் சுஷாந்த் சிங் படத்தை பயன்படுத்திய ஃபிளிப்கார்ட் நிறுவனம் ரசிக்ரகளின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.
ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில் ஆன்லைன் விற்பனையகமான பிளிப்கார்ட் நிறுவனம் டி-ஷர்ட்டில் சுஷாந்த் சிங் படத்துடன் விற்பனை செய்துள்ளது.
இதையும் படிக்க | தங்க மகன்: துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களைக் குவித்த அஜித்
தற்போது இது சர்ச்சைக்கு காரணம் சுஷாந்த் சிங் டி-ஷர்ட்டில் மன அழுத்தம் என்பது நீரில் முழ்குவதைப் போன்றது என்று குறிப்பிட்டுள்ளதுதான். சுஷாந்த் சிங்கின் மரணத்துக்கு காரணம் இதுவரை தெரியாத நிலையில் மன அழுத்த்தில் இறந்தார் என இந்த டி-ஷர்ட் உணர்த்துவதாக உள்ளது.
இது அவரது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாய்கார்ட் ஃபிளிப்கார்ட் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி விமர்சித்துவருகின்றனர். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் ரேட்டிங்கை இழந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.