எனக்கு ஏதாவது நேர்ந்தால் காரணம் இந்த நடிகர் தான் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

எனக்கு ஏதாவது நேர்ந்தால் காரணம் இந்த நடிகர் தான் - நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நடிகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
Published on

பிரபல நடிகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 

தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தவர் தனுஸ்ரீ தத்தா. ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ள இவர் நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் தெரிவித்திருந்தார். 

அப்போது இது ஹிந்தி திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு எதாவது நேர்ந்தால் நடிகர் நானா படேகர் தான் முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அழுத்தத்தில் இருக்கிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நானா படேகர், அவரது வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பர்களும் தான் காரணம். சுஷாந்த் சிங் ராஜ்புத் இறப்பில் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் பாலிவுட் மாஃபியா தான் இதற்கும் காரணம். குறிப்பு - எல்லோருக்கும் ஒரே வழக்கறிஞர் தான். 

அவர்களின் படங்களைப் பார்க்காதீர்கள். என்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்பும் திரைத்துறையினரையும், பத்திரிகையாளர்களையும் படிக்க வேண்டும். நீதி என்னை தோற்கடித்திருக்கலாம். ஆனால் இந்த தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com