கைதியைப் பார்த்துவிட்டு விக்ரமுக்கு வாருங்கள்: லோகேஷ் கனகராஜ்

கைதி திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை மறுபார்வை செய்துவிட்டு விக்ரம் படம் அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கைதியைப் பார்த்துவிட்டு விக்ரமுக்கு வாருங்கள்: லோகேஷ் கனகராஜ்
Published on
Updated on
1 min read


கைதி திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை மறுபார்வை செய்துவிட்டு விக்ரம் படம் அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தப் படம் நாளை (வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் சூர்யா படத்திற்கு வந்தது ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் ஆழ்த்தியது.

இதனிடையே, இதற்கும் கைதி படத்திற்கும் தொடர்புள்ளது, இதற்கும் லோகேஷ் இயக்கவுள்ள விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கும் தொடர்புள்ளது என ஏராளமான தகவல்கள் சமூக ஊடகங்களில் கசிந்தன.

இந்த நிலையில், இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. நினைவு தெரிந்த நாள் முதல் என் சின்ன வயதிலிருந்தே உலகநாயகன் ரசிகனாகவே இருந்திருக்கிறேன், இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன், இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது.

இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். விக்ரம் பட வேலைகளைத் தொடங்கிப் பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. ரத்தமும் வியர்வையும் சிந்த (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, உலகநாயகன் கமல்ஹாசனைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.

வாய்ப்புக்கு நன்றி சார், இந்தத் திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது! இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன்!

என் அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணிநேரங்களில் விக்ரம் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும். அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்! "கைதி"யை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "விக்ரம்" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com