25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் ‘சுழல்’ சீரிஸ்

அபுதாபியில் நடக்கும் 22வது சர்வதேச இந்திய சினிமா விருதுகள் விழாவில் அமேஸான் நிறுவனம் ‘சுழல்’ எனும் தமிழ் இணையத் தொடரை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 2:56 pm IST

அபுதாபியில் நடக்கும் 22வது சர்வதேச இந்திய சினிமா விருதுகள் விழாவில் அமேஸான் நிறுவனம் ‘சுழல்’ எனும் தமிழ் இணையத் தொடரை 30க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

புஷ்கர்-காயத்ரி எழுதி இயக்கியிருக்கும் இந்தத் தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரீயா ரெட்டி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். 

தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தில் காணாமல்போன ஒரு பெண்ணை கண்டறியும் த்ரில்லர் கதை. இதில் மொத்தம் 8 எபிசோடுகள் இருக்குமென சொல்லப்படுகிறது. 

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 30க்கும் மேற்பட்ட இந்திய , வெளிநாட்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி, ஆங்கிலம் , ப்ரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, ஜப்பானிஸ் முற்றும் சில மொழிகளிலும் வெளியாக உள்ளது. 

“பொழுதுபோக்கு என்பதற்கு மொழி முக்கியமில்லை என நாங்கள் திடமாக நம்புகிறோம். இப்போதல்லாம் ரசிகர்கள் திறந்த மனதுடன் இருக்கிறார்கள். நல்ல கதையம்சத்துடன் ஒரு படம் வெளியானால் ஏற்றுக்கொள்கிறார்கள். அமேஸான் மாதிரி தளங்கள் இருப்பதனால் உள்ளூர் சினிமாக்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லவது எளிதாக இருக்கிறது. 

சர்வதேச இந்திய சினிமா விருதுகள் மாதிரி ஒரு பெரிய விழாவில் எங்களது படத்தை வெளியிட வேண்டும் என்ற கனவு நனவானது. ஐஐஎஃப்ஏ மற்றும் அமேசான் நிறுவனத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என புஷ்கர்-காயத்ரி கூறினர். 

‘சுழல்’ ஜூன் 17 முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.