குவெண்டின் டாரண்டினோவின் பாட்காஸ்ட்

திரைப்பட இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ, ரோஜர் அவரி ஆகியோர் இணைந்து பாட்காஸ்ட் எனும் இணைய வலையொலி தளத்தில் தங்களது சினிமாக் கருத்துகளை பகிர உள்ளனர். 
படம்: எஸ்எக்ஸ்எம்  மீடியா  |தி விடியோ ஆர்சிவ்ஸ் பாட்காஸ்ட்
படம்: எஸ்எக்ஸ்எம்  மீடியா |தி விடியோ ஆர்சிவ்ஸ் பாட்காஸ்ட்

திரைப்பட இயக்குநர் குவெண்டின் டாரண்டினோ, ரோஜர் அவரி ஆகியோர் இணைந்து பாட்காஸ்ட் எனும் இணைய வலையொலி தளத்தில் தங்களது சினிமாக் கருத்துகளை பகிர உள்ளனர். 

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர் குவெண்டின் டாரண்டினோ. அவரது படங்களின் வன்முறையும் நான் லீனியர் கதை சொல்லும் பாணியும் மிகவும் புகழ் பெற்றது. அவர் ஆஸ்கார் விருது, கேன்ஸ் திரைப்பட விருது போன்ற ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். 
 
1983இல் குவெண்டின் டாரண்டினோ ரோஜர் இருவரும் பழைய வீடியோ கேசட் கடையில் சந்தித்துள்ளனர். மிகவும் கவனிக்கப்படாத படங்களைக் குறித்து இருவரும் பேசியுள்ளனர். இருவரும் இணைந்து ‘பல்ப் பிக்ஸன்’ படத்திற்க்கு திரைக்கதை எழுதினார்கள். அதற்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.  

எஸ்எக்ஸ்எம்  மீடியா (SXM media) இணையதளத்தில் ஜூலை 19இல் இருந்து  ‘தி விடியோ ஆர்சிவ்ஸ் பாட்காஸ்ட்’ என்ற பெயரில் பாட்காஸ்ட் தொடங்க இருக்கிறது. 

இந்த பாட்காஸ்ட்டில் ரோஜர் அவர்களின் தங்கையும் கலந்துக் கொள்வார்.

“30 வருடத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து வேலை செய்வோமென நினைக்கவில்லை. நாங்கள் மீண்டும் இணைந்து சினிமாக்கள் குறித்து ஆர்வமாக பேச இருக்கிறோம். படங்கள்தான் எங்களை நண்பர்களாக்கியது. இப்போது மீண்டும் அதே சினிமாதான் எங்களை ஒன்றிணைத்துள்ளது. வீடியோ கேசட்டுகள் காலத்துக்கு திரும்புவதாக உணர்கிறோம். படங்கள் குறித்து உரையாட எங்களுக்கு எப்பொதுமே ஆர்வம்தான். எங்களது சேமிப்பில் என்ன மறைவான விடியோ கேசட்டுகள் இருக்கின்றன என தெரிந்து கொள்ள எங்களது பாட்கேஸ்ட்டை கேளுங்கள்” என இருவரும் தெரிவித்தனர். 

இந்த பாட்காஸ்டில் டார்க் ஸ்டார், மூன்ராகேர், டிமணாய்ட், மெசேஞ்சர் ஆப் டெத், பிரன்ஹா போன்ற படங்கள் குறித்தும் பேச இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com