பிரபு சாலமன் இயக்கத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா நடித்த செம்பி படத்தின் டிரெய்லரை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்துவந்த அஸ்வின் குமார், திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார். இந்த நிலையில் அவர் பங்கேற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தார்கள். மேலும் அவர் நடனமாடிய தனிப் பாடல்கள் யூடியூபில் வெளியாகி வைரலாகி வந்தன. இதனையடுத்து என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 40 கதைகள் கேட்டு தூங்கியதாய் அவர் பேசியது சர்ச்சையானது.
இதையும் படிக்க | நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே: டி. ராஜேந்தருக்கு கமல் வாழ்த்து
மேலும் என்ன சொல்லப் போகிறாய் திரைப்படமும் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி என்ற படத்தில் அஸ்வின் குமார் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கோவை சரளா முதன்மை வேடத்தில் நடத்துள்ளார். இந்தப் படத்தை டிரெடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
செம்பி படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் பிரபு சாலமன், நடிகை கோவை சரளா, அஸ்வின் குமார், தயாரிப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து செம்பி படத்தின் டிரெய்லரை அவருக்கு காண்பித்துள்ளனர். டிரெய்லரை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Surreal moment !! God blessed me to meet our #andavar #ulaganayagan Kamal sir