

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பீஸ்ட் திரைப்படத்தின் முழுப் பின்னணி இசையை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் வரும் 22-ம் தேதி தனது 49-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 6.01-க்கு தளபதி 66 படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
பல்வேறு திரையரங்குகளில் விஜய்யின் பழைய ஹிட் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்த வரிசையில், இசையமைப்பாளர் அனிருத் தன் பங்கிற்கு பீஸ்ட் திரைப்படத்தின் முழுப் பின்னணி இசையை வெளியிட்டு விஜய்யின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இவையனைத்தும் தனது மனதிற்கு மிகவும் நெருக்கமானவை என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.