

நடிகர் விஜய்யை தொலைபேசி வாயிலாக அழைத்து நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது 48வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பார்வை போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டர் ரசிகர்களைப் பெரிதும் கவராத நிலையில், தற்போது வெளியான இரண்டாவது போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய்க்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்துதெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக நடிகர் விஜய்யை தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்படவில்லை. விக்ரம் வெற்றிவிழாவில் பேசிய கமல், லோகேஷின் அடுத்தப் படத்துக்கு (தளபதி 67) உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.