மீண்டும் ஜாக் ஸ்பாரோவாக நடிக்க ரூ.2,350 கோடி சம்பளமா? பதிலளித்த நடிகர் ஜானி டெப்

ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.2,350 கோடி சம்பளம் பேசப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஜானி டெப் பதிலளித்துள்ளார்.
மீண்டும் ஜாக் ஸ்பாரோவாக நடிக்க ரூ.2,350 கோடி சம்பளமா? பதிலளித்த நடிகர் ஜானி டெப்
Published on
Updated on
1 min read

ஜாக் ஸ்பாரோ கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.2,350 கோடி சம்பளம் பேசப்பட்டதாக வெளியான தகவல் குறித்து ஜானி டெப் பதிலளித்துள்ளார்.

‘பைரட்ஸ் ஆஃப் தி கரேபியன்' படங்களில் 'ஜேக் ஸ்பாரோ' கதாபாத்திரத்தில் ஜானி டெப் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்.

அவர் நடிகை ஆம்பர் ஹெர்ட்டை  2015இல் திருமணம் செய்து கொண்டார். பிறகு 2 ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.

பின்னர் 2018இல் ஆம்பர் ஹெர்ட் ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் பெண்கள் எவ்வாறு பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என ஒரு கட்டுரையில் தனது முன்னாள் கணவரான ஜானி டெப் மீது அவதூறுகளை எழுதினார். இதனால் ஜானி டெப்க்கு ஏராளமான அவமதிப்புகள் நடந்தது. அவருக்கு வரவேண்டிய படங்கள் தட்டிக்கழிக்கப்பட்டன. எனவே, அவர் நஷ்டஈடு கேட்டு ஆம்பர் ஹெர்ட் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் சமீபத்தில் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. அதில் ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலரை இழப்பீட்டு தொகையாகவும் , 5 மில்லியன் டாலரை தண்டனைக்குரிய இழப்பீட்டு தொகையாகவும் மொத்தம் 15 மில்லியன் வழங்க வேண்டும் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஜானி டெப்புக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் துவங்கியதும் மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்நிலையில், அவர் மீண்டும் ஜாக் ஸ்பாரோவாக நடிக்க டிஸ்னி தயாரிப்பு நிறுவனம் 300 மில்லியன் டாலர்(ரூ.2,350 கோடி) சம்பளம் வழங்க முன்வந்ததாக தகவல் வெளியாகி ஹாலிவுட்டில் பரபரப்புச் செய்தியானது.

ஆனால், இதுகுறித்துப் பேசிய ஜானி டெப் ‘இந்தத் தகவல் உண்மையல்ல..’ என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com