சிவப்பு பாண்டா கரடியான சிறுமி: ரசிகர்கள் விரும்பும் ‘டர்னிங் ரெட்’
டிஸ்னி மற்றும் பிக்ஸார் தயாரித்து, டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளிவரவுள்ள ‘டர்னிங் ரெட்’ திரைப்படம் மார்ச் 11 அன்று வெளியாகியுள்ளது.
13 வயது இளம்பெண் எதிர்கொள்ளும் உயர்கல்வி குறித்த அச்சங்கள், பருவமடைதல், உறவுகள், குழப்பமான குடும்பம் ஆகியவற்றை எதிர்கொள்வதைக் குறித்து பேசும் படம்தான் டர்னிங் ரெட். இளம் பெண்ணான மேய் லீ, தன்னுடைய குழப்பமான வயதில் ஒரு பெரிய சிவப்பு பாண்டா கரடியாக மாறுவதே திரைப்படத்தின் கதைக்களமாகும்.
இதையும் படிக்க | ஜப்பானில் ரிக்டர் 7.3 அளவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
டோமீ ஷி இயக்கத்தில், டிஸ்னி மற்றும் பிக்ஸார் தயாரிப்பில் வெளியாகியுள்ள டர்னிங்ரெட் திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள் என முழுவதும் பெண்கள் என்பது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை டோமீ ஷி மற்றும் ஜூலியா சோ ஆகியோர் திரைக்கதை எழுத லின்ட்ஸி காலின்ஸ் தயாரித்துள்ளார். இளம்பெண்ணின் பரபரப்பான வாழ்க்கையை நகைச்சுவையுடனும் உணர்வுபூர்வமாகவும் கூறும் இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.