
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரில் நடிகர்கள் மாற்றப்பட்டாலும் தொடருக்கு பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வம் குறையவில்லை. இந்தத் தொடரில் சில மாதங்களுக்கு முன்னதாக நடிகை சாயா சிங் களமிறங்கினார்.
இந்த நிலையில் பூவே உனக்காக தொடரில் நடிகை சோனியா அகர்வால் சிறப்பு தோற்றத்தில் களமிறங்கவிருக்கிறாராம். இதற்கான ப்ரமோ விடியோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
சோனியா அகர்வால் வரும் காட்சிகள் வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோனியா அகர்வாலின் வருகை எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.