

நடிகர் பார்த்திபன் இயக்கியுள்ள இரவின் நிழல் திரைப்படத்தின் முதல் பார்வை சனிக்கிழமை வெளியானது.
திரைத்துறையில் பல்வேறு வித்தியாசமான படைப்புகளை வழங்கிவருவதன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். அவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க | காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நெதர்லாந்து
இந்நிலையில் ஒத்த செருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை சனிக்கிழமை வெளியானது. திரைப்படத்தின் போஸ்டரை இயக்குநர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.