நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் கே. பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் செல்லாது என அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வாக்கு எண்ணிக்கைக்கும் தடை விதித்தார்.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கிக் கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைக் கடந்த மாதம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்தனர்.
இதையும் படிக்க- நடிகர் சங்கத் தேர்தல்: விஷால், கார்த்தி வெற்றி
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆரம்ப முதலே நாசர் தலைமையிலான பாண்டவர் அணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு பாண்டவர் அணி சார்பில் போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜைவிட 647 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் 1,054 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலர், பொருளாளர், துணைத் தலைவர்கள் ஆகிய 5 பதவிகளைக் பாண்டவர் அணி கைப்பற்றியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


