

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாளை வெளியாகிறது.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். பாகுபலி படத்துக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று
இந்தப் படத்தின் வேலைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜனவரி 7 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்திற்கான விளம்பர வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால் கரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதையும் படிக்க | உபி முதல்வராக நாளை (மார்ச் 25) பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.