
விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து தங்களது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்த படம் 'ராக்கி'. அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் இசைக்கும் தர்புகா சிவாவின் ஒளிப்பதிவிற்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்தப் படத்தில் பாரதிராஜா, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படிக்க | பா.ரஞ்சித்தின் 'ஜே.பேபி' முதல் பார்வை போஸ்டர் வெளியீடு: கதை இதுதான்!
இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிறது. வாக்கு ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை ஹிந்தியில் தயாரிக்கிறது. இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார்.
அருண் மாதேஸ்வரன் அடுத்ததாக செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'சாணிக் காயிதம்' படத்தை தயாரித்துள்ளார். அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.