

இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள சென்டிமீட்டர் படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பிரபல இயக்குநர் மணி ரத்னம் வெளியிட்டுள்ளார்.
ஜேக் அண்ட் ஜில் என்கிற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இது அவர் இயக்கியுள்ள 3-வது மலையாளப் படம். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், பசில் ஆண்டனி, சோபின் ஷகிர் போன்றோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் சிவன் பல மொழிகளிலும் 12 படங்களை இயக்கியுள்ளார்.
இதே படம் தமிழில் சென்டிமீட்டர் என்கிற பெயரில் வெளியாகிறது. தமிழில் யோகி பாபு படக்குழுவில் இணைந்துள்ளார்.
மே 20 அன்று வெளியாகும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பிரபல இயக்குநர் மணி ரத்னம் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.