நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சால் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மேடையிலேயே உடைந்து அழுதார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் திடீரென கரோனாவால் மறைந்த அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து குறித்துப் பேசும்போது ‘நீ எவ்வளவு பெரிய இழப்பை சந்தித்திருக்கிறாய் என்பது தெரியும். உன் வெற்றியில் எப்போதும் சிந்துவின் பங்கு உண்டு. இனி நீ பெறப்போகும் அனைத்து வெற்றிகளிலும் உயரத்திலும் சிந்து கூடவே இருப்பாங்க’ எனக் கூறினார்.
இதைக்கேட்ட இயக்குநர் அருண்ராஜா மேடையிலேயே உடைந்து அழுதார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.