

ஜீப் ரேஸில் கலந்துகொண்டதற்காக மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
‘ஜோசப்’ ‘ஒன்’ ‘நயாட்டு’ ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் முக்கியமான நடிகர்.
இவர் கடந்த சில நாள்களுக்கு முன் கேரளத்தில் உள்ள வாகமனில் நடைபெற்ற ஜீப் ரேஸில் தன்னுடைய ஜீப்புடன் பங்கேற்றுள்ளார்.
பந்தயத்தில் அவர் அதிவேகமாக ஜீப்பை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பின், அதையொட்டிய விமர்சனங்களும் எழுந்ததால் அவர் மீது விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ரேஸில் பங்கேற்றதாகவும் ஜீப் ரேஸ் நடைபெற்ற இடம் விவசாயம் நிலம் என்பதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.