'கூகுள் குட்டப்பா' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ஆண்டிராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த மே 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது.
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் மனிதனுக்கும் ரோபோவுக்கும் இடையேயான நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யோகி பாபு, பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.
இந்நிலையில், இப்படம் வருகிற ஜுன் 3 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.