
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தின் பூஜை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ரஜினி 170-ஐ இயக்க இருக்கிறார். நகைச்சுவை நிறைந்த திரைப்படமான டான், ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதையும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா...
இதற்கிடையே, ரஜினி 170 படத்தின் தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றது. இந்த படத்தில் நடிகர் அரவிந்த் சாமி, வடிவேலு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் பூஜை நாளை(நவ.5) சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.