

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன்.
இதையும் படிக்க | யுவன் சங்கர் ராஜாவுக்கு கோல்டன் விசா
இந்தத் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க பிக்பாஸ் ஆரவ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் குரோலி படத்துக்கு இசையமைக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தின் ஹே புயலே பாடலை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். ஸ்ரேயா கோஷல், சத்ய பிரகாஷ் பாடியுள்ள இந்தப் பாடலை கார்க்கி எழுதியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் வருகிற நவ.18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.