நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை கௌதமி மீண்டும் நடிக்க வந்துள்ளார். படப்பிடிப்பில் இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த், பிரபு நடித்த ’குரு சிஷ்யன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கௌதமி. பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு, மலையாளத்திலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
2006-ல் 'சாசனம்' படத்துக்குப் பிறகு 2015ல் கமல் ஹாசனுடன் 'பாபநாசம்' படத்தில் நடித்தார். இதையடுத்து பாஜகவில் இணைந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது பாலிவுட்டில் தயாராகும் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். மும்பையில் படப்பிடிப்பில் உள்ளதாக அவர் புகைப்படம் ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.