

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல திரைபடத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.
கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இதையும் படிக்க | அண்ணாவுக்கு ஆதரவு கோரிய ஐஸ்வர்யா ராஜேஷ்: விமர்சிக்கும் ரசிகர்கள்!
இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதிநாள் படப்பிடிப்பு நிறைவடைந்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.