
பிரபல இசையமைப்பாளர் திருமணம் செய்துகொண்டார்.
'பண்ணையாரும் பத்மினியும்', 'ஒரு நாள் கூத்து', 'டியர் காம்ரேட்' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்.
இறுதியாக, பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான ’ராதே ஷியாம்’ படத்திற்கு பிண்ணனி இசையமைப்பாளாரக பணியாற்றினார்.
இதையும் படிக்க: அந்தக் காலத்தில் ‘இந்து மதம்’ என்கிற பெயர் கிடையாது: கமல்ஹாசன்
இந்நிலையில், ஜஸ்டின் பிரபாகரன் - கரோலின் சூசன்னா இணையின் திருமணம் நேற்று மதுரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, ஷாந்தனு பாக்யராஜ், கலையரசன், காளி வெங்கட், பால சரவணன், ஆதித்யா கதிர் இயக்குனர்கள் பா.ரஞ்சித், விக்ரம் சுகுமாரன், நாகராஜ், மான்ஸ்டர் பட இயக்குனர் நெல்சன், அதியன் ஆதிரை உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.