கோவில் குளத்தில் குளிக்க சென்ற நடிகர் நீரில் முழ்கி மரணம்
மலையாள நடிகர் தீபு கோவில் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மலையாள நடிகர் தீபு கோவில் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன். மலையாள திரைப்படங்களில் உதவி இயக்குநராக இருந்துவருகிறார்.
இவர் நேற்று (அக்டோபர் 10 ) அதிகாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீபுவை தேடிய போது அவரது உடை, காலணி கிடைத்திருக்கிறது.
பின்னர் நீண்ட தேடுதலுக்கு பிறகு காலை 7 மணியளவில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏறப்படுத்தியுள்ளது. தீபுவிற்கு வயது 41.
உரும்புகள் உறங்கரில்லா, ஒன்ஸ் இன் மைன்ட் மற்றும் பிரேம சூத்ரம் போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள தீபு, உரும்புகள் உறங்கரில்லா படத்தில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...