ஹிந்தி படத்தில் இப்படி ஒரு காட்சியா? பிரபல இயக்குநர் பகிர்ந்த விடியோ

மூடர் கூடம் இயக்குநர் நவீன் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 
ஹிந்தி படத்தில் இப்படி ஒரு காட்சியா? பிரபல இயக்குநர் பகிர்ந்த விடியோ

மூடர் கூடம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நவீன். அடுத்ததாக இவர் இயக்கிய அலாவுதீனும் அற்புத கேமராவும், அக்னி சிறகுகள் போன்ற படங்களின் பணிகள் முடிந்தும் வெளியாகாமல் இருக்கின்றன. 

இதில் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய் - விஜய் ஆண்டனி இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர்  முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குநர் சமூக நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கருத்து தெரிவித்துவருகிறார். அதில் சில பதிவுகள் சர்ச்சையாவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் சயீஃப் அலிகான், தீபிகா படுகோன் நடித்துள்ள ஹிந்தி பட காட்சி ஒன்றை நவீன் பகிர்ந்துள்ளார். 

அந்தக் காட்சியில் நிறுவனத்தின் முதலாளி ஒருவர், ''கடினமாக உழைக்க பயமாக இருக்கிறதா?'' என சயீஃப் அலிகானிடம் கேட்கிறார். அதற்கு சயீஃப் அலிகான், ''நீங்கள் எங்களுக்கு கடின உழைப்பு பற்றி சொல்லிக்கொடுக்கிறீர்களா? இதுவரை நாங்கள் செய்தது எல்லாம் என்ன?  நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்றால், வரலாற்றை மீண்டும் சென்று படியுங்கள். 

கடினமாக உழைப்பவர்கள் யார்?  தங்களது பிறப்புரிமை போல கொள்ளையடிப்பவர்கள் யார் ? என வரலாற்றைப் படித்தால் உங்களுக்கு தெரியும். நூற்றாண்டுகளாக உங்கள் பெட்டிகளில் பணத்தை நிரப்பிவிட்டீர்கள். இப்பொழுது தொண்டுக்காக கையேந்துகிறோம் என நீங்கள் எங்களை குற்றம்சாட்டுகிறீர்கள்?

உங்கள் நிலங்களில் நாங்கள் கதிர் அறுத்தோம், உங்கள் மாடுகளை மேய்த்தோம். பல்லக்குகளில் உங்களது மனைவிகளையும், மகள்களையும் சுமந்து சென்றோம். உங்கள் பிணங்களை எரித்தோம், உங்களின் ஷூ தைத்தோம், உங்கள் எருதுகளை ஓட்டினோம். உங்கள் வீட்டின் அழுக்கான வடிகால்களை சுத்தம் செய்தோம், உங்கள் அழுக்குகளை நாங்கள் தலையில் சுமந்து சென்றோம். ஆனால் நீ எங்களைப் பார்த்து கடினமாக உழைக்க பயப்படுகிறோம் என்கிறீர்கள் என ஆவேசமாக பேசுகிறார். 

இந்த விடியோவைப் பகிர்ந்த இயக்குநர் நவீன், ''ஹிந்தி படத்துல இப்படி ஒரு காட்சி. நம்பவே முடியல. செம வசனம். முடிந்தால் யாராவது தமிழில் மொழிமாற்றம் செய்யுங்கள். தெறிக்கவிட்டிருக்கிறார்கள்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com