''வெறித்தனமா இருக்கும்'' - விக்ரம் - பா.ரஞ்சித் படம் குறித்த அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் தொடர்பான முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். 
''வெறித்தனமா இருக்கும்''  - விக்ரம் - பா.ரஞ்சித் படம் குறித்த அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படம் தொடர்பான முக்கிய தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனயைடுத்து விக்ரம் நடிக்கும் படத்தைப் பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். 

பாடகர் அறிவு தொடர்பாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரது நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மா இசையமைத்தார். 

தற்போது விக்ரம் - பா.ரஞ்சித் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். அதில், ''சீயான் 61 பட அப்டேட் விரைவில் வெளியாகும். வெறித்தனமாக இருக்கப் போகிறது. இசையைப் பொறுத்தவரை பணிபுரிவதற்கு மிக சுவாரசியமான படம்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

கேஜிஎஃப்-ல் வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com