

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ஆர். கண்ணன் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஹிந்தி இயக்குநருடன் கைகோர்க்கும் சுந்தர்.சி
திருமணத்தின் பெயரில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் குறித்துப் பேசியதால், இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இதனால், தமிழில் எந்தளவுக்கு அதன் வீரியம் மாறாமல் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு படத்தின் டிரெய்லரை படக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.