பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறிய ஜி.பி.முத்து குறித்து சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட ஜி.பி.முத்து தான் ஆதிக்கம் செலுத்தினார். பிக்பாஸ் வீட்டில் அவரது பேச்சு, நடவடிக்கைகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன.
நிச்சயம் ஜி.பி.முத்து தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என ரசிகர்கள் நினைக்கத் துவங்கினர். ஆனால் தன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை, மகன்தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.
இதையும் படிக்க | தக தகவென ஜொலிக்கும் தமன்னா (புகைப்படங்கள்)
அவர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 3வது சீசனில் வனிதா பாதியில் வெளியேறி, பின்னர் வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸில் நழைந்தது போல ஜி.பி.முத்து மீண்டும் வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜி.பி.முத்து குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ''வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜி.பி.முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி பெற
தகுதியான
ஒரு போட்டியாளன்,
அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காக
புகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன்