''இனி இதெல்லாம் இல்ல'' - நடிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்

தேவையில்லாத செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது. 
''இனி இதெல்லாம் இல்ல'' - நடிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம்

தேவையில்லாத செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறி தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 3 வாரங்களில் ஓடிடியில் வெளியாவதால் படத்தின் வசூல் பாதிப்பதாக கூறி தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவகை்கப்பட்டது. 

அப்பொழுது சில முக்கிய முடிவுகளை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், 

  • இனிமேல் நடிகர்களுக்கும்  தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது.
  • நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பணியாளர்கள், பயண செலவு, தங்குமிடம், சிறப்பு உணவுகள் ஆகியவை அடங்கும். மேற்சொன்னவைகளுக்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடுதலாக செலவு செய்யமுடியாது. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இது பொருந்தும். 
  • நடிகர்களுடனான ஒப்பந்தத்தில் ஊதிய விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். 
  • நடிகர்கள் ஒப்பந்த படி சரியான நேரத்தில் படப்பிடப்பில் கலந்துகொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு தினசரி தகவல் தரவேண்டும். 
  • படங்கள் திரையரங்குகளில் வெளியாகும்போது ஓடிடி குறித்த விவரங்கள் இடம்பெறாது. 
  • படங்கள் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தபட்சம் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாகவேண்டும் போன்ற முடிவுகளை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.

மேற்சொன்ன அனைத்தும் வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் நடைமுறைக்குவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com