
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘ட்ரிக்கர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
‘8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கிய அதர்வாவின் குருதி ஆட்டம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ‘டிரிக்கர்’ (Trigger). குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தில் பி.எஸ். மித்ரன் வசனம் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ் காந்த உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் படத்தின் தணிக்கைக் குழு சான்றிதல் யுஏ எனக் கிடைத்தது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.