நடிகரின் போலி முகநூல் பக்கம் மூலம் பிரதமர் குறித்து அவதூறு: உண்மையில் நடந்தது என்ன ?

நடிகரின் போலி முகநூல் பக்கம் மூலம் பிரதமர் குறித்து அவதூறு: உண்மையில் நடந்தது என்ன ?

பிரபல நடிகரின் போலி முகநூல் பக்கம் மூலம் பிரதமர் குறித்து அவதூறு பரப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
Published on

பிரபல நடிகரின் போலி முகநூல் பக்கம் மூலம் பிரதமர் குறித்து அவதூறு பரப்பப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மலையாளத்தில் ஹோம், தண்ணீர் மாத்தான் தினங்கள் படங்களின் மூலம் பிரபலமானவர் நஸ்லென். இவரது பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பதிவிட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது. 

 இந்த சர்ச்சை குறித்து நடிகர் நஸ்லென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, ''என் பெயர் கொண்ட முகநூல் பக்கத்தில் பிரதமர் குறித்த அவதூறாக பதிவிட்டிருப்பதை  நண்பர்கள் மூலம் அறிந்துகொண்டேன். 

அந்த முகநூல் பக்கம் போலியானது. நான் அப்படி எந்தப் பதிவும் எழுதவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதில்லை. எனக்கு முகநூல் கணக்கு இல்லை. இதுகுறித்து நான் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் துபையிலிருந்து அந்த போலி முகநூல் கணக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com