இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு தேர்வாகாததில் எந்தவிதமான வருத்தமும் இல்லை: பார்த்திபன்

இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு தேர்வாகாததில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லையென இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.
இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு தேர்வாகாததில் எந்தவிதமான வருத்தமும் இல்லை: பார்த்திபன்
Published on
Updated on
1 min read

இரவின் நிழல் படம் ஆஸ்கருக்கு தேர்வாகாததில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லையென இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

குஜராத்தி இயக்குநர் பான் நிலன் இயக்கத்தில் உருவான ‘ஷெல்லோ ஷோ’ (The last film show- Chhello Show)  திரைப்படம் இந்தியாவின் சார்பாக 2023 ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

மகிழ்ச்சி! எந்த எக்ஸ்ட்ரா சிபாரிசும் தேவையில்லாமல் ஆஸ்காருக்கு இந்தியாவிலிருந்து அனுப்ப தகுதியான ஒன்றிரண்டு படங்களில் ஒன்று ‘லாஸ்ட் ப்ளிம் ஷோ’ குஜராத்தி படம். (சினிமா பாரடைஸோ பாதிப்பில்) ப்ளிமிலிருந்து டிஜிட்டல் என்ற விஞ்ஞான வளர்ச்சியில் சிக்குண்ட சில உள்ளங்களில் என்னுடையதும் ஒன்று! அதை ஒரு சிறுவனை வைத்து நம் இதயத்தை சில்லு சில்லாக உடைத்து, கடைசியில் நம்பிக்கையின் ஒளி அவன் கண் வழிய நாம் காணும்படி செய்த இயக்குனர் பான் நிலன் அவர்களுக்கு வாழ்த்துகள். திறமை எங்கிருந்தாலும் அதை உலகின் முதல் ஆளாய் திறந்த மனதோடு வரவேற்று வாழ்த்த வேண்டும்!!! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com