
வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குநர் மீது திரைப்பட விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படம் மெதுவாக நகர்வதாக ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'வெந்து தணிந்தது காடு' படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன் மீதான தனது கோபத்தைப் பதிவுசெய்துள்ளார். “அவர் மீது இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு கோபம் வருது'' என கூறியது வைரலானது.
தற்போது இதற்கு பதிலடியாக ப்ளு சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேனன் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.