’நானே வருவேன்’ முதல்நாள் வசூல் இவ்வளவா? இயக்குநரைப் பாராட்டிய தயாரிப்பாளர்

நானே வருவேன் திரைப்படத்திற்காக இயக்குநர் செல்வராகவனை தயாரிப்பாளர் தாணு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இயக்குநர் சுப்ரமணிய சிவா, செல்வராகவன், தயாரிப்பாளர் தாணு (இடமிருந்து வலம்)
இயக்குநர் சுப்ரமணிய சிவா, செல்வராகவன், தயாரிப்பாளர் தாணு (இடமிருந்து வலம்)
Updated on
1 min read

நானே வருவேன் திரைப்படத்தின் முதல்நாள் வசூலுக்காக இயக்குநர் செல்வராகவனை தயாரிப்பாளர் தாணு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாக அமைந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'நானே வருவேன்' திரைப்படம் நேற்று வெளியானது.

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களமிறங்கினாலும் சிறிய படம் என்பதால் ரசிகர்கள் வருகை இன்று குறைந்துள்ளது. ஆனால், படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருவதால் அடுத்தடுத்த நாள்களில் இதன் வியாபாரம் அதிகரிக்கும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், எந்தவிதமான விளம்பரமும் இப்படத்திற்குச் செய்யப்படதாபோதும் வெளியான முதல் நாளில் (நேற்று- செப்.29) தமிழகம் முழுவதும் ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதன் காரணமாக, தயாரிப்பாளர் தாணு இயக்குநர் செல்வராகவனை நேரில் சந்தித்து மாலை அணிவித்து தன் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com