ஆஸ்கர் விருது விழாவில் நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த காரணத்துக்காக அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. விருது விழா நடைபெற்ற டால்பி திரையரங்கில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.
இந்த விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அன்றைய தினம் அவர் வென்றார். கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித்.

இந்நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்சஸ் அமைப்பின் நிர்வாகக் குழு, ஆஸ்கர் விருது விழா உள்ளிட்ட அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அகாதெமியின் குழுவில் இருந்து சமீபத்தில் வில் ஸ்மித் ராஜிநாமா செய்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்குத் தடை விதிக்கப்பட்டாலும் அவருடைய படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படுவதிலோ அவர் ஆஸ்கர் விருதுகளை வெல்வதிலோ எவ்விதத் தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அகாதெமி அமைப்பின் முடிவை ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெருக்கமானவர்களுக்கு அரசு உயர் பதவி: வெங்கட நாராயணா விவகாரத்தில் டிடிவி தினகரன் கண்டனம்

அயர்லாந்து கேப்டன் அரைசதம்; இந்தியாவுக்கு 183 ரன்கள் இலக்கு!
வெங்கட நாராயணா நியமனம்: அதிமுக கண்டனம்

நடப்பு நிதியாண்டில் வணிக வாகனத் துறை மிதமான வளர்ச்சியை எட்டும்: ஐசிஆர்ஏ
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan



