சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

ஹிந்தியில் 'கேஜிஎஃப் 2'-க்கு கிடைத்த வரவேற்பால் தள்ளிப்போனது 'ஜெர்சி' வெளியீடு

ஹிந்தியில் கேஜிஎஃப் 2 படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக ஜெர்சி படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 5:37 pm IST


யஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 ஆம் பாகம் வருகிற 14 ஆம் இந்திய அளவில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் மீது மக்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். 

குறிப்பாக ஹிந்தியில் இந்தப் படத்தைக் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் கேஜிஎஃப் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அன்றைய தினம் ஷாகித் கபூர் நடிப்பில் ஹிந்தியில் 'ஜெர்சி' என்ற படமும் வெளியாகவிருந்தது. இந்தப் படம் தெலுங்கி நானி நடிப்பில் வெற்றிபெற்ற ஜெர்சி படத்தின் ஹிந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படத்துக்கு ரசிகர்கள் அளித்துவரும் வரவேற்பு காரணமாக ஜெர்சி படம் ஒரு வாரம் தள்ளி ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் படமும் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் தொடர்ந்து தென்னிந்திய திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது ஹிந்தி திரையுலகினரிடையே கலக்கத்தை ஏற்படுத்திவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.