
சின்னத்திரை உலகில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக கலக்கிக்கொண்டிருப்பவர் அர்ச்சனா. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரபரப்பாக பேசப்பட்டார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தில் அர்ச்சனா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அர்ச்சனாவின் மகள் ஜாராவும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையும் படிக்க | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்துக்கு இசையமைக்கும் இளையராஜா
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் அர்ச்சனாவும், ஜாராவும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். அதில் ரசிகர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்ள சம்மதமா எனக் கேட்டார். அதற்கு அர்ச்சனா, உன்னுடைய அம்மா அப்பாவை ஒரு 15 ஆண்டுகளுக்கு பிறகு என்னிடம்வந்து பேச சொல் என தனக்கே உரிய பாணியில் நக்கலாக பதிலளித்தார்.
Archana's response to someone who proposed her daughter Zaara pic.twitter.com/0QBZ0TvbiW
— Anbu (@Mysteri13472103) April 9, 2022