
நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்திற்காக தான் வளர்க்கும் காளையுடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.
சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.
இந்நிலையில், சூர்யா தான் வளர்க்கும் காளையுடன் ‘என் தமிழ்..’ என தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறி ஒரு விடியோவைப் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!! pic.twitter.com/Adgd6odF7o
— Suriya Sivakumar (@Suriya_offl) April 14, 2022