
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் இன்று (ஏப்ரல் 21) நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்தப் படத்தில் தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், மகன் ஆர்னவ் விஜய் என மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கான படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க | ''படத்திலும் அப்படி நடிக்காதீங்க'' - அல்லு அர்ஜுனுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை
இந்தப் படம் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓ மை டாக் படத்தைக் காண ஆவலாக இருப்பதாக கருத்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், செல்லப் பிராணிகளின் நலம் விரும்பியாக இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கு பதிலளித்த நடிகர் சூர்யா, ''நன்றி சார். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் இந்தியா ரோட்ஸ்க்கு இந்தப் படம் மிகவும் என உறுதியாக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Thanks a lot!! Big fan @JontyRhodes8 I’m sure your daughter #IndiaRhodes will like it too!! https://t.co/s5KAkCGrGE
— Suriya Sivakumar (@Suriya_offl) April 21, 2022