நடிகர் விமல் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 
நடிகர் விமல் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

நடிகர் விமல் மீது சிங்காரவேலன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவரது புகார் மனுவில் ''மெரினா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் படங்களை விநியோகம் செய்துவருகிறேன். நடிகர் விமல் கடந்த 2016 ஆம் ஆண்டு எனக்கு அறிமுகமானார். இவர் நடித்த படங்களான இஷ்டம், புலிவால், மாப்பிள்ளை சிங்கம் போன்ற படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன. 

இதனால், மார்க்கெட் இழந்தார். அப்போது திருப்பூரை சேர்ந்த கணேசன் என்பவர் வாயிலாக மன்னர் வகையறா படத்தை தயாரிக்கவிருப்பதாகவும், அதற்காக தனக்கு பண உதவி செய்யுமாறும் கேட்டார். 

அப்போது என் நண்பரும் தயாரிப்பாளருமான கோபி என்பவரிடம் ரூ.5 கோடி வாங்கிக் கொடுத்தேன். 

இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ல், விமல் என்னை சந்தித்து களவாணி 2 படத்தை தயாரிக்கவுள்ளதாகவம், சற்குணம் இயக்கவுள்ளதாகவம் கூறி, படத்தின் விநியோக உரிமையை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்  என்றார். 

குறுகிய காலத்தில் படத்தை முடித்துவிடுவதாகவும், படத்தின் தயாரிப்பு செலவுகளுக்காக ரூ.1.50 கோடி வேண்டும் என்றும் கேட்டார். நானும் கொடுத்தேன். ஆனால், பட தயாரிப்பு பணிகளை துவங்கவில்லை. ஒரு கட்டத்தில் களவாணி 2 படத்தை இயக்குநர் சற்குணமே தயாரிக்கிறார். நான் உங்களிடம் வாங்கிய பணத்தை, இந்தப் படத்தின் வெளியீடுகளுக்கு முன் கொடுத்துவிடுகிறேன் என்றார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. 

இதன் காரணமாக விமல் மீது என் தயாரிப்பு மேற்பார்வையாளர் வாயிலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்தேன். அதன் பின்  ஒரு அரசியல் பிரபலத்தை அணுகி, எனக்கு தரவேண்டிய பணத்தை செட்டில் செய்து விடுவதாக விமல் தெரிவித்தார். நானும் சமமதம் தெரிவித்து, இருவரும் ஆவணத்தில் கையெழுத்திட்டோம். அச்சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆன நிலையில் விமல் என்னிடம் வாங்கிய ரூ. 1.50 கோடியை தராமல் மோசடி செய்து விட்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக தயாரிப்பாளர் கோபி என்பவர் மன்னர் வகையறா படத்துக்காக தன்னிடம் ரூ.5 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டாக பரபரப்பு தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை நடிகர் விமல் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com